பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பெரிய தொழில்களுக்கு சூப்பர் வரி விதிக்கப்படுவதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், நாடு திவாலாகும் நிலைக்கு செல்வதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 சதவீதம் 'சூப்பர் வரி' விதிக்கப்படுகிறது என்றார்.
தங்களின் முதல் நோக்கம் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மக்கள் மீதான பணவீக்க சுமையை குறைத்து அவர்களுக்கு வசதி செய்வதும் ஆகும் என்றும் கூறினார்.