வானில் இன்று முதல் வருகிற 27 ஆம் தேதி வரை 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அற்புதம் நிகழவுள்ளது.
வெள்ளி, புதன்,செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 7 கிரகங்கள் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன.
இந்த கிரகங்களின் அணிவகுப்பில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ்-ஐ தவிர ஏனைய 5 கிரகங்களையும் 24 ஆம் தேதி முதல் சூரிய உதயத்திற்கு முன்னால் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், 27 ஆம் தேதி எஞ்சிய அந்த இரண்டு கிரகங்களையும் கூட பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.