சீனாவில் மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
மின்சார கார்களை தயாரிக்கும் நியோ நிறுவனத்தின் ஷோ ரூம், ஷாங்காயில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வருகிறது.
கடந்த புதன்கிழமையன்று ஷோ ரூமில் பயிற்சியில் இருந்த ஒரு கார் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் காரில் இருந்த பயிற்சி ஓட்டுநர் உள்பட இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.