இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதி மக்கள் கிறித்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருப்பதை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பெடோயின் அரபு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரஹாட் நகரத்தில் நெகேவ் பாலைவனம் அமைந்துள்ளது.