40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குரங்கம்மை பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் பரவல் அசாதாரணமானதாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
குரங்கு அம்மை பாதிப்பு இன்னும் அதிகமான நாடுகளுக்கு பரவும் அபாயத்தில் உள்ளதால், சர்வதேச அளவில் நோயைக் கட்டுப்படுத்த அவசர நிலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.