ஸ்பெயினில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் வெப்பம் அதிகரித்துள்ளது.
சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாட்ரிட்டில் நீரூற்றுகளில் நனைந்து விளையாடியும், மரங்களின் நிழலில் படுத்தும் அப்பகுதி மக்கள் வெப்பத்தை தணித்துக்கொண்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சூடான காற்றோட்டமே தீவிர வெப்பத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.