ஆப்கானிஸ்தானில், முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு தாலிபான்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
பொதுவெளியில் முகத்தையும், உடலையும் முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியாத பெண்களின் ஆண் உறவினர்களின் அரசு பணிகள் பறிக்கப்படும் என தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சதா ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்காத ஆடைகளை அணிவதன் மூலம் பெண்கள் மிருகங்கள் போல இருக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.