சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவனான ஹனி அகமது அல்குர்தியைப் பிடிக்க எட்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வட்டமிட்டன.
அமெரிக்காவால் சிரியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தலைவன் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணன் என்று கூறப்படுகிறது.
வடமேற்கு சிரியாவின் ஒரு தனி வீட்டில் அவன் இருப்பதை அறிந்த அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த வீட்டின் மேல் தாழப்பறந்து முற்றுகையிட்டன.
இரண்டு ஹெலிகாப்டர்கள் சில நிமிடங்கள் மட்டும் தரையைத் தொட்டதாகவும் துப்பாக்கி சண்டைக்குப் பிறகு தீவிரவாதி கைது செய்யப்பட்டாதவும் அதிகாரிகள் தெரிவித்தனர்