மெக்சிகோ நாட்டில் Oaxaca மாகாணத்தில் 2 படகுகளில் இருந்து ஆயிரத்து 347 கிலோ கோகைன் போதைப்பொருளை அந்நாட்டின் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Huatulco கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 படகுகளை கடற்படையினர் சோதனையிட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடற்படையினர் பின்தொடர்வதை அறிந்த போதை கும்பல் தங்கள் வாகனத்தை கப்பலில் ஏற்றி Chacahua ஏரி வழியாக சென்றது.
இதனை அடுத்து கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்ற போது அந்த கும்பல் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது. பின்னர் அந்த வாகனத்தில் இருந்து 36 மூட்டைகளில் பதுக்கி வைத்த கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.