கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏறத்தாழ 4 ஆயிரத்து 200 ஹெக்டேர் விளை நிலங்கள், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பெருமழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகின.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கனமழை தொடர வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.