தெற்கு ஈரானில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்கு நகரமான ஃபிரூசாபாத் நகரில், செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனிய வாயு கசிவின் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.