தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈக்வடாரில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாகாணங்களில் சுமார் 20 சாலைத் தடைகள் அமைத்து, எரிபொருள் விலை மற்றும் விவசாய பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.