ஆசிய வர்த்தகத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததன் எதிரொலியாக, கிரிப்டோ சந்தையில் முன்னணியாக உள்ள பிட்காயினின் விலையானது இன்று 8 புள்ளி 9 சதவீதம் சரிந்து 25 ஆயிரம் டாலருக்கு கீழ் வர்த்தகமானது.
இதே போன்று, அவலாஞ்சி காயின் (Avalanche) 15 சதவீதமும், எதிரியம் காயின் (Ethereum) 12 சதவீதமும் சரிவை கண்டுள்ளதால் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.