அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டுப்பாடு வாரயிறுதியுடன் நிறைவுக்கு வருவதாக வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பயணத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 90 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை பயணத்திற்கு முன் காண்பிக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.