சுவீடனை ஒட்டியுள்ள பால்டிக் கடலில் மிகப்பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரி எரிபொருள் வகையாக இருக்கலாம் என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
77 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஸ்வீடனை ஒட்டியும், ஃபின்லாந்தை ஒட்டியும் அந்த திரவ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம திரவம் முதன்முதலில் கடந்த புதன்கிழமை போத்னியன் கடலில் கண்டறியப்பட்டது.
அது கச்சா எண்ணெய் அல்ல என்றும், அது கரை ஒதுங்குவதற்கான அறிகுறி தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அது என்ன திரவம் என்பதை கண்டறிய ஒருவாரம் ஆகும் என தெரிவித்தனர்.