அமெரிக்காவில், ரயில்வே தண்டவாளத்தில் 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளி விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
நியூயார்க்கின் வெஸ்ட் செஸ்டர் & ஜேக்சன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து, நியூயார்க் போலீசார் வீடியோ வெளியிட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கண்டறிய மக்கள் உதவ வேண்டுமெனவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.