பிரான்சில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கின.
மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பாரீஸ், Rouen நகர சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.
மின்னல் தாக்கியதில் 15ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. ஈபிள் டவர் மீது மின்னல் தாக்கியதாகவும் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளம் சூழும் பகுதிகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.