ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
பள்ளிக்கூடங்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைத்து தாக்குவது போர் குற்றம் என குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசு மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறியுள்ளது.
கடந்த மாதம் பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் இருந்த பள்ளி ஒன்றின் மீது நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் அந்த பள்ளி தரைமட்டமானதாகவும், 60 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.