உலகம் முழுவதும் 30 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் 550க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் திடீரென பரவி வருவதாக குறிப்பிட்ட அவர், இது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறியதோடு பாதிக்கப்பட்ட நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.