தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் பனிபடர்ந்து வெண்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன.
வரும் நாட்களில் பனிப்பொழிவு இன்னும் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய மக்கள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர்.