ஆப்கானிஸ்தானில் பெண் தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக, ஆண் தொகுப்பாளர்களும் மாஸ்க் அணிந்து திரையில் தோன்றினர்.
ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள், அண்மையில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு செய்தி வாசிக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
இந்நிலையில் தாலிபன்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பெண்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஆண் தொகுப்பாளர்கள் முகமூடி அணிந்துக் கொண்டனர்.