பாகிஸ்தானில் 80 சதவீதம் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் வேலைவாய்ப்பு துறையில் தொடர்வதாகவும், சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீதம் காலியிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு வரவேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.