ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு உதவ நாலாயிரம் கோடி டாலர் வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே, அதை எதிர்கொண்டு முறியடிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் படை வலிமையை அதிகரிக்க நாலாயிரம் கோடி டாலர் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.