உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்ய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கார்கிவ் பகுதியை மீட்க உக்ரைன் வீரர்கள் போராடி வரும் சூழலில், ரஷ்ய படைகள் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக கூறினார்.
அதோடு, ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களை கொல்ல முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய ஜெலென்ஸ்கி, முடிந்த வரை அதிகளவிலான சேதங்களை விளைவிப்பதே அவர்களின் இலக்காக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், கடந்த வியாழன் அன்று செவெரோடோனெட்ஸ்கில் குண்டு வீசி ரஷ்ய படைகள் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்தார்.