பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பாகிஸ்தானில் கடும் உணவுத் தட்டுப்பாடு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல மடங்கு பெருகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது .இந்நிலையில் அமெரிக்காவுடன் அரசு ரீதியான உறவை மேம்படுத்தவும் பொருளாதார நட்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கு பிலாவல் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை விமர்சித்துள்ள இம்ரான் கான், அமெரிக்காவிடம் பிச்சையெடுக்க பிலாவல் போயிருப்பதாகக் கூறியுள்ளார்.