செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வரும் 2 மாதம் கடினமான காலம், சவால்களை சந்திக்க மக்கள் தயார் நிலை.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை.1

May 17, 2022 10:10:24 AM

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 லட்சம் டன் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வருவிருக்கும் இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிக கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். 15 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார சவால்களை மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண 75 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி இரண்டே நாட்களில் தேவைப்படுவதாக கூறிய ரணில், ஒரு நாளுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பில் இருப்பதாகவும், டீசல் வரத்து காரணமாக பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்க புதிய பட்ஜெட், நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் அச்சடிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளை எடுக்க உள்ளதாக ரணில் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த இரு மாதங்களில் இந்தியாவில் இருந்து தலா இரு கப்பல்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வர உள்ளதாகவும், 12 தவணையில் நான்கு லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள், கடன் உரிமை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும் ரனில் தெரிவித்தார்.

தமது குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்பு தனி நபரையோ, குடும்பத்தையோ காக்கும் முயற்சி இல்லை என்றும், நாட்டு மக்களையும் வருங்கால இளைஞர் சமுதாயத்தையும் காக்கும் திட்டம் என ரணில் விக்ரமிசிங்கே தமது உரையில் குறிப்பிட்டார்.


Advertisement
பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..
ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தூள் தூளாக்கிய இஸ்ரேல்
மொசாட் தலைமையகம் மீது தாக்குதல்.. ஈரான் செய்த தவறுக்கு உரிய பதில் அளிக்கப்படும் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்... வீதிகளில் திரண்டு மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு
ஆப்பிள் 'AirPod' உதவியுடன் திருடு போன தனது சொகுசுக் காரை கண்டுபிடித்த இளைஞர்
ஈரானில், கொடுங்கோலர்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் : இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து..
லெபனான் ஹெஸ்பொல்லா, ஏமன் ஹவுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களில் 77 பேர் உயிரிழப்பு
பூமிக்கடியில் 60 அடி ஆழ பங்கரில் பதுங்கியிருந்த ஹெஸ்புல்லா தலைவர் நஸரல்லாவை கொன்ற இஸ்ரேல் ராணுவம்..

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement