ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள கார்கீவ் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் வீரர்கள் வெற்றி குறியீடு காட்டியபடி நிற்கும் காணொளியை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் வீரர்கள் கடுமையாகப் போராடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதி முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதை குறிக்கும் விதமாக உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே கரவொலி எழுப்பி அவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.