உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்துவதற்காக திறந்து விடப்பட்ட அணையால் இன்றளவும் டெமிடிவ் கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
போர் ஆரம்பித்த போது, ரஷ்ய படைகளை தடுப்பதற்காக இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை உக்ரைன் ராணுவத்தினர் திறந்து விட்டு செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தினர்.
கீவ் நகரை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்ட ரஷ்ய படைகள் தற்போது டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்பின.
2 மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்த வெள்ளத்தால் இன்றளவும் மக்கள் ரப்பர் படகுகளில் பயணித்து வருகின்றனர்.