எதிரி நாட்டின் ஹைப்பர்சானிக் வகை ஏவுகணையை வானில் இடைமறித்து தாக்கும் 'கிளைடு பிரேக்கர்' எனும் அமெரிக்க ராணுவத்தின் வான் பாதுகாப்பு திட்டம் அடுத்த கட்ட சோதனைக்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிக்கு சுமார் ஆயிரத்து 225 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஒலி பயணிக்கிறது.
ஒலியின் வேகத்தை விட குறைந்தபட்சம் 5 மடங்கு, அதாவது மணிக்கு சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் ஏவுகணைகள் ஹைபர்சானிக் ஏவுகணை என அழைக்கப்படுகிறது.