செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம்

May 07, 2022 06:12:38 AM

இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது . போராட்டங்களை ஒடுக்க ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கான பிரதான சாலையை மறித்து மாணவர்கள் 24 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தினர்.

இதனிடையே தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. துறைமுகம் தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஊழியர்கள் பெருவாரியாக இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் கொழும்பில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் பயணிகள் ரயில்நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

போராட்டங்கள் வலுப்பெற்று வருவதையடுத்து அதிபர் கோத்தபயா தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இலங்கையில் நள்ளிரவு முதல் அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. ராணுவத்துக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடுமையான உத்தரவுகள் இடப்பட்டிருப்பதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
நெருங்கும் சக்தி வாய்ந்த மில்டன் சூறாவளி.. புளோரிடாவில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்
காசா, லெபனானில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் - குட்டரெஸ் வலியுறுத்தல்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்புக்காக ஆதரவு திரட்டிவரும் எலான் மஸ்க்
பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தது... அர்ஜெண்டினா அரசை கண்டித்து திறந்த வெளியில் நடைபெற்ற வகுப்புகள்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்க வரும் 'மில்டன்' சூறாவளி
அல்பேனிய பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Advertisement
Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!


Advertisement