சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 830 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ள அவர்கள், அந்த தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும், தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனையும் செய்து பார்த்துள்ளனர்.
இது சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் அமைத்துள்ள 7 வது வானிலை ஆய்வு மையம் ஆகும்.
அதில் சீனா - நேபாள எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏற்படும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி ஆகியவற்றின் அடர்த்தியை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் வகையில் ரேடார் வசதியும் உள்ளது.