உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் உள்ள மகீவ்கா எண்ணெய் கிடங்கின் மீது ஏவுகணைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்தது.
டொனெட்ஸ்க் தற்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், உக்ரைன் படைகள் நிகழ்த்திய தாக்குதலால் எண்ணெய்க் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதத் தலைவர் டெனிஸ் புஷ்லின் தெரிவித்திருக்கிறார்.
இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கில் இருந்த சுமார் 5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 4 டேங்க்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் இருவர் படுகாயமடைந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.