மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த ராணுவ தளவாடத்தை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒடேசா நகருக்கு அருகில் உள்ள இராணுவ விமான நிலையத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட ஆளில்லா பேரக்டர் ரக TB2 ட்ரோன்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
அந்த ராணுவ தளவாடத்தை அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் ஒடேசா கவர்னர் மக்சிம் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.