சீனாவில் புதிதாக 368 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த 20 பேருமே ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு உணவங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.