ஈராக்கில் வழக்கத்திற்கு மாறாக வீசிய புழுதிப் புயலால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
500 மீட்டருக்கு குறைவிலான பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்கு புலப்படாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.