பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மே தினத்தன்று அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கொள்கை எதிர்ப்பாளர்கள் கருப்பு உடையில் வந்து வணிகக்கட்டிடங்களை சேதப்படுத்திய நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசி போலீசார் துரத்த முயன்றனர். பதிலுக்கு அவர்களும் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் பொருட்களை போலீசார் மீது வீசியெறிந்ததால் கலவரம் ஏற்பட்டது.
லா ரிபப்ளிக் சதுக்கத்தில் இருந்து கிழக்கு பாரிஸில் உள்ள நேஷன் சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல துவங்கிய போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. பாரிஸ் உட்பட லில்லி, நேண்டஸ் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும் நேற்று சுமார் 250 போராட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.