உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுத உதவிகள் வழங்குவதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷ்யா சூசகமாக எச்சரித்துள்ளது.
இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான மரிய சாக்கரோவா, நேட்டோ நாடுகளின் ராணுவ இலக்குகளை தங்களால் தாக்க இயலும் என்றும், பிரிட்டனும் அதன் உறுப்பினர்தான் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை எம்பிக்கள் முன்னிலையில் அதிபர் புதின் உரையாற்றியபோது, தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளதாகவும், அதனை பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தாக்குதலுக்கான சாத்தியங்கள் தொடர்பாக அவர் சூசகமாக தெரிவித்தார்.
ஏற்கனவே, அணு ஆயுத தாக்குதலே உண்மையான ஆபத்து என்றும் மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்திருந்தார்.