ஜப்பானில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ரயில் இயக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை இந்த ரோபோ சுலபமாக சரிசெய்வதால், மனிதர்களின் ஆபத்தான பணிக்கு ரோபோ உதவிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ, சுமார் 40 கிலோ எடையுள்ள பொருட்களை 10 மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தற்போது சோதனை முறையில் மட்டும் மனித ரோபோ பயன்படுத்தப்படுவதாகவும், 2024-ஆம் ஆண்டு முழு வீச்சில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.