உக்ரைன், ரஷ்யா போரை தடுக்கவோ, முடிவுக்கு கொண்டு வரவோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாகவும் அது விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கியிடம், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போரை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறி விட்டாலும் உக்ரைன் மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை எனக் கூறினார்.
உக்ரைனில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கும் பணிகளில் ஆயிரத்து 400 ஐ.நா. பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யப் படைகள் நிகழ்த்தியது 21 நூற்றாண்டின் அபத்தமானச் செயல் என்றார். ஆண்டோனிய குட்ரெஸ் உக்ரைனின் பல்வேறு நகரங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.