ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் பண வீக்கம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, புதிய குடியிருப்பு கட்டடங்களின் விலை உயர்வு மற்றும் கல்வி கட்டண உயர்வு ஆகியவை அன்றாட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மாரிசன் அரசு எரிபொருள் மீதான செஸ் வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.