ஜப்பானில் குழந்தைகளுக்கான பல் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க குந்தைகளை போலவே உள்ள ஹூமனாய்ட் ரோபாட் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பற்களில் சிகிச்சை அளிக்கும்போது அவர்கள் வலியால் துடிப்பது உள்ளிட்டவற்றை இந்த ரோபாட் தத்ரூபமாக செய்து காட்டுகிறது.
ரோபாட்-ன் பல்வேறு பாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம், வாய், நாக்கு, மற்ற உடல் பாகங்களின் அசைவுகளை ஆய்வு செய்ய முடிவதாகவும், அதனை வைத்து உண்மையான குழந்தைகளுக்கு நேர்த்தியாக சிகிச்சை அளிக்க உதவுவதாகவும் இந்த ரோபாட்டை தயாரித்த டிம்சுக் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.