உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய எல்லைப் பகுதியான லூஹான்ஸ்கில் உள்ள ரஷ்ய நிலைகளை குறிவைத்து உக்ரேனிய ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றனர்.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், போட்டிப் போட்டு கொண்டு இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்களை முறியடித்து, ரஷ்யாவின் இராணுவ வாகனங்களை தகர்த்தெறிந்ததகாக உக்ரைன் தெரிவித்துள்ளது.