2021ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செலவு இரண்டு இலட்சம் கோடி டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 162 இலட்சம் கோடி ரூபாயாகும்.
சுவீடன் நாட்டின் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சூழலிலும் கூட உலக நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கான செலவு பூச்சியம் புள்ளி 7 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு அதிகத் தொகை செலவழிப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் உலகின் பாதுகாப்புத் துறைக்கான செலவில் 62 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.