சீனாவின் ஷாங்காய் நகரத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வருமாறு நகர மக்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கால் ஷாங்காய் நகர வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.
இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த சிலர் பிபிஇ கிட் அணிந்திருந்தனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்பவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. நகரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.