பிரேசிலில் புகழ்பெற்ற சம்பா நடன திருவிழா களைகட்டி வருகிறது.
திருவிழாவின் முக்கிய அம்சமான பாரம்பரிய சம்பா நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள சம்போட்ரோமோ மைதானத்தில் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது.
நடன பயிற்சி பள்ளிகளை சேர்ந்த நடன மற்றும் இசைக்கலைஞர்கள் குழுவினர் வண்ணமயமான உடைகள் அணிந்து அலங்கார ஊர்தியுடன் வந்து தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தியவாறு ஊர்வலமாக சென்றது மைதானத்தையே ஒளிரச்செய்தது.
இதனை ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். கடந்த 20-ம் தேதி தொடங்கிய திருவிழா இம்மாத இறுதி வரை நடைபெற உள்ளது.