எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேக இணைய சேவைக்காக மேலும் 53 ஸ்டார் லிங்க்ஸ்பேஸ் எக்ஸ்களை விண்ணில் செலுத்தியது.
புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் 53 செயற்கைகோள்கள் அடங்கிய 12 தொகுப்பை விண்ணுக்கு எடுத்துச் சென்றது.
புவிவட்ட பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்ட நிலையில் ராக்கெட் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஏறத்தாழ 2 ஆயிரத்து 300 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் செயற்கைகோள்களை அனுப்ப பெடரல் தொலைத்தொடர்பு கமிஷனிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில் அதை 30 ஆயிரமாக உயர்த்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.