உள்நாட்டில் விலை உயர்வைத் தடுக்க இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்குத் திடீரென தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 28 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடிடோ அறிவித்தார்.
இதனால் சமையல் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களில் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போரால் பணவீக்கமும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பேக்கிங் உணவுப் பொருட்களின் விலை வாசியும் அதிகரித்து வருகிறது. இத்தடையால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும்..