தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அவர் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தென்கொரிய அதிபர் தேர்தலில் ஆளும் டெமாக்ரட்டிக் கட்சி தோல்வியடைந்தது.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் யூன் சுன் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிபர் மூன் ஜே இன் விரைவில் பதவி விலக உள்ளார்.