3 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஷாங்காய் நகரில் வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால், இம்மாத தொடக்கம் முதல், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறையத் தொடங்கிய போதும், சாமானியர்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கரின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், 4 நாட்களாக மொத்தம் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் வரும் 26-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.