புவி நாளையொட்டிப் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
பல்வேறு ஆண்டுகளில் செயற்கைக் கோளில் இருந்து எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் படங்களைக் கூகுள் தேடுபொறியில் வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ, கிரின்லாந்தின் செர்மர்சூக் ஆகிய இடங்களில் முன்பிருந்த பனிப்பாளங்களின் அளவு புவி வெப்பமாதலால் குறைந்துகொண்டே வருவதைச் செயற்கைக்கோள் படங்களுடன் உணர்த்தியுள்ளது.
இதேபோல் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியரில் பவளப் பாறைகள் அழிந்து வருவதையும், ஜெர்மனியின் ஹர்ஸ் காடுகளின் பரப்பு குறைந்துள்ளதையும் படங்களுடன் விளக்கியுள்ளது.